தொகுப்பாளராக கலந்து கொள்ளும் இளையராஜா..
இவருக்கு இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம்பெற்றார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ராஜபார்வை என்ற ஒரு இசைப் போட்டி நடத்த போவதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இந்நிகழ்ச்சி பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் கிடைத்துள்ளது. இந்நிகழ்வின் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இசைஞானி இளையராஜா இருப்பார் என்ற தகவல்களும் கசிந்து வருகின்றன. இருப்பினும் நிகழ்ச்சி பற்றிய எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை
இசைஞானி இளையராஜா மேல்நாட்டு இசையிலும் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். மனதில் துன்பம் வந்தாலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தாலும் நம் மனதில் தோன்றுவது இசைஞானியின் பாடல் தான்.
அந்த அளவிற்கு இசைஞானியின் பாடல்கள் மக்களின் வாழ்க்கையோடு பிணைந்து இருக்கிறது.
1986 விக்ரம் திரைப்படத்தில் முதன் முதலாக கணினியில் பாடல்கள் பதிவு செய்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா தான். இளையராஜா இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.