விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்

#TamilCinema
Prasu
3 years ago
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்

இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை தயாரித்து இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

BirthDay Party

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் ‘பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி’ என்று பதிவு செய்து இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!