உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் நடிகர் விஜய்...

#India
Yuga
4 years ago
உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் நடிகர் விஜய்...

உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

வேட்புமனுத் தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது . செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி தேதி. அதிமுக கூட்டணியில் இடம் வகிக்கும் பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தது. பின்னர் தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தது.

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை உள்ளாட்சி தேர்தலில் களமிறக்க பச்சைக் கொடி காட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்தின் தலைமையில் 20 மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடைபெறவிருக்கிற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4