கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட ரகசியம் என்ன? யார்? படபிடிப்புக் குழு அதிர்ச்சி..
விக்ரம் பட வெற்ரறிய படப் பிடிப்பின் புகைப் படங்கள் காட்டிக் கொடுத்துள்ளதாம்.விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளதாம்.
இதுவும் காரைக்குடியின் புறநகர் பகுதிகளில் நடத்தப்படுகிறதாம்.
இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கு பின்னால் நடந்த பிடிஎஸ் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
லைட்ஸ் ஆன் உயரமான டவர் அமைத்து, பெரிய கயிறுகள் மற்றும் வளையங்களில் கேமிராவை பொருத்தி ஷுட்டிங் நடத்தும் ஃபோட்டோக்கள் தான் வெளியாகி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
விக்ரம் படத்திற்கு வசனம் எழுதும் டைரக்டர் ரத்னகுமார் தான் இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார். லைட்ஸ் ஆன் என்ற ஸ்டிக்கருடன் இந்த ஃபோட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார். அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இதே ஃபோட்டோவை நீண்ட பதிவுடன் அசிஸ்டென்ட் டைரக்டர் மெட்ராஸ் லோகி விக்னேஷும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அட்டகாசமாக துவங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது பகிர்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கமல் இந்த படத்தில் de aging டெக்னாலஜி போன்றவற்றை பயன்படுத்தி 1980 களில் இருந்தது போன்ற லுக்கிற்கு கமலை மாற்றி உள்ளார்களாம்.
கமல் ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை தந்துள்ளது. கமலை மீண்டும் இளமை தோற்றத்தில் காண, அவர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.