மிஷ்கின் இயக்கத்தில் கதாநாயகனாகும் விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின்.
அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நான்கு நாட்கள் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அது ஒரு முக்கியமானக் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.