சிவகார்த்திகேயனுடன் இணைந்த கௌதம் வாசுதேவ மேனன்..

Prabha Praneetha
3 years ago
சிவகார்த்திகேயனுடன் இணைந்த கௌதம் வாசுதேவ மேனன்..

கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ஜோஷ்வா இமை போல் காக்க ஆகிய படங்கள் தயாராகி இன்னும் வெளியாகாமல் உள்ளன. அதோடு வெந்து தணிந்தது காடு படத்தை சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இதனிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. 

ஐசரி கணேஷ் அனேகமாக இந்தப் படத்தை தயாரிக்கலாம். இத்தனை பிஸி ஷெட்யூல்டில் அவ்வப்போது படங்களில் நடிக்கவும் செய்கிறார் கெளதம். கடைசியாக அவர் நடித்திருப்பது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்.

டான் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் சமீபத்திய படப்பிடிப்பு ஆக்ராவில் நடந்தது. தாஜ்மஹாலில் ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது.

ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் கௌதம் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து டான், அயலான் படங்கள் வெளியாகும். டான் படத்தை முடித்த பின் அட்லியின் உதவி இயக்குனரின் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!