இன்றைய வேத வசனம் 21.9.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 21.9.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்தேயு 21:22 ) என்று சொல்லி இருக்கிறார்.

எனக்கு அன்பானவர்களே, விசுவாசத்தினால்தான் அற்புதம் நடக்கும்! அப்படியானால் நீங்கள், “தேவனாகிய கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறார்! என் ஜெபத்திற்கு ஏற்ற வேளையில் அவர் பதில் தருவார்! கட்டாயம் எனக்கு அற்புதம் செய்வார்!” என்கிற விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும்.

உங்கள் தேவைகளுக்காக, ஆத்துமாக்களுக்காக, உங்கள் திருச்சபைக்காக, உங்கள் ஊழியத்திற்காக, தேசத்தின் எழுப்புதலுக்காக, கொள்ளை நோய் முற்றிலும் நீங்க என்று, எந்தக் காரியத்திற்காக நீங்கள் ஜெபித்தாலும், விசுவாசத்தோடு ஜெபியுங்கள், அற்புதம் நடக்கும்!

“இன்னும் எவ்வளவு காலம்? ' என்று நினைக்கிறீர்களா? நீங்கள் விசுவாசத்தோடு ஜெபிப்பீர்களானால், தேவனாகிய கர்த்தர் வெகு சீக்கிரத்திலே நியாயம் செய்வார்! ஆகவே, சோர்ந்து போகாதிருங்கள்!

கடமைக்காக, சும்மா பெயருக்காக ஜெபிக்காதிருங்கள். விசுவாசத்தோடு ஜெபியுங்கள்!

ஒரு சமயம் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினருக்காக நான் ஜெபிக்கப் போயிருந்தேன்.

அந்த வீட்டிலுள்ள ஒரு தாயார், “சகோதரரே, என் கணவருக்காக ஜெபம் பண்ணுங்கள்.” என்று சொன்னார்கள்.

உடனே நான், “சரி, நான் ஜெபம் பண்ணுகிறேன். அவருக்காக நீங்கள் ஜெபம் பண்ணுகிறீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஐயா, அவர் இரட்சிக்கப்பட வேண்டும் என்று, நானும், என் பிள்ளைகளும் 20 வருடங்களாக ஜெபிக்கிறோம். அவர் தேவாலயத்திற்கு வர மாட்டார்! எங்களையும் போக விடமாட்டார்!

‘கடவுளே இல்லை!' என்றுதான் சொல்வார்! நாங்கள் அவருக்குப் பயந்து வீட்டிற்குள்ளேயே இருந்து வேதாகமத்தை வாசித்து ஜெபிக்கிறோம். இன்னும் அவரிடத்தில் ஒரு மாற்றமும் வரவில்லை!" என்று துக்கத்தோடு சொன்னார்கள்.

“சரி, ஜெபம் பண்ணுவோம்.” என்று சொல்லி முழங்கால்படியிட்டு, “அம்மா, உங்கள் கணவர் இரட்சிக்கப்படுவார்! ஜெபம் பண்ணுவோம்! ” என்று சொன்னபோது, “அவர் எங்கே இரட்சிக்கப்படப் போகிறார் ஐயா? ”என்று சொன்னார்கள்!

அப்படியானால் 20 வருடங்களாக அவர்கள் என்னதான் ஜெபம் பண்ணியிருக்கிறார்கள்?

ஒரு விசுவாசமே இல்லாமல், “அவர் இரட்சிக்கப்படவே மாட்டார்!” என்று, அவிசுவாசத்தோடுதான் ஜெபித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்!

எனக்கு அன்பானவர்களே, நீங்கள் எந்தக் காரியத்தைக் குறித்தும் விசுவாசத்தோடு ஜெபித்தால்தான் அற்புதம் நடக்கும்.

இன்றைக்கு தேவனாகிய கர்த்தர் உங்களைப் பார்த்து, “என் மகனே(ளே), விசுவாசத்தோடு ஜெபி. சீக்கிரத்திலே நான் உனக்கு நியாயம் செய்வேன்! வெகு சீக்கிரத்திலே நீ அற்புதத்தைக் காண்பாய்!” என்று சொல்லி, உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார்.

விசுவாசியுங்கள்! இன்றே நீங்கள் அற்புதத்தைக் காண்பீர்கள்! வெகு சீக்கிரத்திலே அற்புதங்களும், மாற்றங்களும் உண்டாவதைக் காண்பீர்கள்!

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!