உலகம் முழுவதும் பைக் ரைடு செய்த பெண்ணை நேரில் சந்தித்த அஜித்
வலிமை படத்தில் நடித்து முடித்து இருக்கும் நடிகர் அஜித், டெல்லியில் உலகம் முழுவதும் பைக் ரைடு செய்த பெண்ணை சந்தித்து பேசியிருக்கிறார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்றது முடிந்தது. இதன் படப்பிடிப்புக்கு பிறகு அஜித் ரஷ்யாவில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோ என்ற பெண்ணை டெல்லியில் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் அஜித்.
மாரல் யசர்லோ தன் பைக்கில் 7 கண்டங்கள், 64 நாடுகளை கடந்திருக்கிறார். எதிர்காலத்தில் தன் பைக்கில் உலகம் சுற்றும் திட்டத்தில் அஜித் இருப்பதால் மாரலிடம் ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரல் யாசர்லோவுடன் அஜித் சந்தித்து பேசிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.