‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு....
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேய் மாமா’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விக்னேஷ் ஏலப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கூர்கா பட பிரபலம் ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரீத்தம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ராய் லட்சுமி நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.