அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிப்பு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமோ குரேஷி நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.