நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்

Prabha Praneetha
3 years ago
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!