இன்றைய வேத வசனம் 23.9.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 23.9.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

மலையும் நதிகளும் கடலும் சார்ந்த ஊர் அது. அந்த ஊரில், ஆடுகளை பராமரித்து மேய்க்கும் மேய்ப்பன் ஒருவன் இருந்தான். தினமும் காலையில் அவனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய், மலை அடிவாரத்தில் இருக்கும் புல்வெளியில் மேய விடுவான். 

மதியம், வெயில் உச்சிக்கு வரும்போது, அங்குள்ள குளத்து நீரைப் பருகச் செய்வான். போதாக்குறைக்கு அங்குள்ள குளக்கரையில் இருக்கும் மரங்களிலிருந்து பசுந்தழைகளை அறுத்து வந்தும் போடுவான்.  

மாலைநேரம் வந்துவிட்டால், எல்லா ஆடுகளையும் நீர் வற்றிய சிறு ஓடையில் ஒன்றாகச் சேர்ப்பான்.

அப்படிச் சேர்த்தபிறகு தன்னிடமுள்ள ஆடுகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா? எனப் பார்த்தபிறகே அங்கிருந்து புறப்படுவான். அந்தி நேரம் சூரியன் மேற்கே மறையும் நேரம் அவற்றை ஒருசேர ஓட்டிச் சென்று தனது கொட்டிலில் அடைத்து வைப்பான். 

ஒருநாள் மாலைநேரம் அவனது மந்தையில் 99 ஆடுகள் மட்டுமே இருந்தன. ஒரே ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. 'அந்த ஆடுமட்டும் எங்கே போயிற்று?' எனத் தேட ஆரம்பித்தான். சூரியனும் அஸ்தமிக்கத் தொடங்கிவிட்டான். நேரமும் கடந்து போய்க்கொண்டிருந்தது. இருள் கவ்வியபோது வழிதவறிப்போன ஆட்டை அவன் கண்டுபிடித்தான்.

சொல்லமுடியாத ஆனந்தத் துள்ளலுடன் அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கி தன் தோள்களில் வைத்துக் கொண்டாடியபடியே மற்ற ஆடுகளையும் ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான்.

அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பார்ப்போரிடமெல்லாம் அந்த நிகழ்ச்சியைச் சொல்லிக் குதூகலித்தான்.  

இந்தக் கதையைப் போலவே 'மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்பும் ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

இறைவாழ்விலிருந்து வெகுதூரம் விலகிப்போய், உலகபூர்வமான விஷயங்களில் தன் மனதையும் உடலையும் செலுத்தி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, வழிதவறிப் போன ஆடுகளாகிய நமக்காக நம் மேய்ப்பன் காத்திருக்கிறார்.

மாற்கு 1:15
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!