ரஜினியுடன் அஜித் நடிப்பதில் சிக்கல்
நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை.இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை ரிலீஸாகும் எனக் கூறப் படும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், ரஜியின் அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் வலிமை படமும் அதே தேதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வலிமை படத்தை ரஜினி படத்துடன் ரிலீஸ் ஆகவேண்டாம் எனவும், பொங்கலுக்கு ரிலீஸ் செய்யச் சொல்லி அஜித் குமார் கூறியதாகவும் தெரிகிறது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸாகவுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.