சொந்தமாக திரையரங்கம் ஆரம்பித்த நடிகர் விஜய் தேவர்கொண்டா
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தன் சொந்தத் திரையரங்கை திறந்து வைத்திருக்கிறார்.
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வெளியான அப்படம் தமிழ் , ஹிந்தி என சில மொழிகளில் ரீமேக் ஆனது. இருந்தாலும் விஜய் -க்கு கிடைத்த வரவேற்பு பிற எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை.
அதற்கடுத்து ‘கீதா கோவிந்தம்’ ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் நடித்து தெலுங்கின் தவிர்க்க முடியாத நடிகரானார். தமிழிலும் ‘நோட்டா’படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் சொந்தமாக திரையரங்கம் ஒன்றைக் கட்டி வந்தார்.´ஏவிடி சினிமாஸ்´ எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரையரங்கத்தைக் கடந்த செப்-18 ஆம் தேதி திறந்து வைத்தார். தற்போது அந்தத் திரையரங்கில் நாக சைதன்யா , சாய் பல்லவி நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் இன்று (செப்-24) வெளியாகிறது.