17 லட்சத்திற்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட் வாங்கிய நடிகர் ஜூனியர் என் டீ ஆர்(புகைப்படம் உள்ளே)
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ள நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 17 லட்சத்திற்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை வாங்கி உள்ளாராம்.
உலகிலேயே அதிவேகமாக ஓடக் கூடிய லம்போர்கினி காரை வாங்கி உள்ள ஜூனியர் என்.டி.ஆர் அந்த காருக்காகத் தான் இப்படியொரு விலை கொடுத்து ஃபேன்ஸி நம்பரை வாங்கி உள்ளாராம்.
நாடு முழுவதும் ஜூனியர் என்.டி.ஆரின் புதிய நம்பர் பிளேட் விலையை பற்றித் தான் ஒரே பேச்சாக உள்ளது. ஒரு நம்பர் பிளேட்டுக்கு ரூ. 17 லட்சம் செலவழித்துள்ளாரே அப்படி என்ன ஃபேன்சி நம்பர் அது என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‘TS09 FS 9999' எனும் ஃபேன்சி நம்பருக்காகத் தான் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 17 லட்சத்தை தண்ணி போல செலவழித்து உள்ளதாக தெலுங்கானாவின் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 17 லட்சம் ரூபாய்க்கு நம்பர் பிளேட் வாங்குகிறார் என்றால், அப்போ அவருடைய சொகுசு காரின் விலை எவ்வளவு இருக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.
Lamborghini Urus Graphite Capsule எனும் பிரத்யேக சொகுசு காரை கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 3.16 கோடிக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வாங்கி உள்ளாராம். ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ள நிலையில், உலகின் அதிவேகமான சொகுசு கார் மீது கொண்ட ஆசையால் இந்த காரை வாங்கி இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்