இன்றைய வேத வசனம் 25.9.2021

#Prayer #Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 25.9.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி... இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே  பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது.

ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன.
இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர்.

மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 70 முதல் 80 சதவிகித ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

மது அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், மதுவால் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டுமே பாதிக்கப்படுவதோடு எண்ணற்ற நோய்களும் ஏற்படுகின்றன.

மது அருந்தும்போது, அதில் உள்ள நச்சுக்கள் இரைப்பையை நேரடியாகத் தாக்கிப் புண்ணாக்கும். இதனால், ஒட்டுமொத்த செரிமான மண்டலமே பாதிக்கப்படும்.

தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, சர்க்கரை நோய் மற்றும் கணைய அழற்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம், இதய நோய், புற்று நோய், மலட்டு தன்மை என்று இன்னும் பல உடல் அவயங்கள் பாதிப்படைகின்றன.

இப்படி இலட்சக்கணக்கானோர் தங்களைக் மதுக்கு அடிமையாக்கி கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக வாழும் படி அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சோகமான விளைவுகளுக்கு கர்த்தருடைய இரக்கம் ஒன்றே விடுதலை ஒருவன் உண்மையாகவே மனம் வருந்தி கர்த்தரிடம் திரும்பி அவரைத் தன்னுடைய இரட்சகராகவும் வாழ்க்கையின் அதிபதியாகவும் இருக்க அனுமதித்தால் அவன் தன்னுடைய பாவத்தை மேற்கொள்ள பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பலத்தின் மூலாதரமாக ஆகிறார்.

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; (எபேசியர் 5:17-18)

களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.

துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.(ரோமர் 13:13-14

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!