இன்னும் சில மணி நேரங்களில் புயல்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை - எச்சரிக்கும் வானிலை மையம்

Prabha Praneetha
4 years ago
இன்னும் சில மணி நேரங்களில் புயல்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை - எச்சரிக்கும் வானிலை மையம்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானில ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும். இந்த புயல் சின்னம் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திர-தெற்கு ஒடிசா கடற்கரையை  விசாகபட்டினம்-கோபால்பூர்க்கு இடையே கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 25.09.2021: மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.09.2021:  தென்  மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.09.2021: தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்  மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


28.09.2021: தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4