ஷிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார். அதன்படி, பிக்பாஸ் பிரபலம் சாண்டி, விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.