7 வருடம் கழித்து வெளிவரும் அருண் விஜய்யின் படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான தடம், மாபியா போன்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.
தற்போது கைவசம் ஏராளமான படங்களை அருண் விஜய் வைத்துள்ளார். அந்த வகையில் யானை, பாக்ஸர், பார்டர், ஓ மை டாக் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் எப்போதோ உருவான படம் ஒன்றை தற்போது வெளியிட உள்ளார்கள்.
2014 ஆம் ஆண்டே உருவான இப்படம் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த றெக்க, ஜீவாவின் சீறு ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் இயக்குனர் ரத்தினசிவா.
இந்த இரண்டு படங்களுக்கு முன்னரே அவர் இயக்கிய படம் தான் வா டீல். அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார்.