இன்றைய வேத வசனம் 28.9.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அன்பு சகோதர சகோதரிகளே, தேவப் பிள்ளையாகிய சிலர் தங்களை அறியாமலேயே ஆபாச படம் பார்ப்பதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்!
பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல யாரை விழுங்கலாம் என்று வகை தேடிச் சுற்றித்திரிகிறான் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
உங்களுடைய சிறிய கவனக்குறைவினால், பிசாசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களை இந்த பாவத்திற்குள் இழுத்துச் செல்வான்.
பல நேரங்களில் வாழ்க்கையில் நாமே பிசாசிற்கு கதவை திறந்து கொடுக்கிறோம். பிசாசு உள்ளே வரும்போது, ஒருமுறை கதவை அடைத்து விட்டோமேயானால், அவனுக்கு வழியில்லை என்று போய்விடுவான். பிசாசு மீண்டும் நம் அருகே வரவே முடியாது.
அவன் ஒரு பல் இல்லாத சிங்கம், செத்த பாம்பு அவனால் பயமுறுத்த மட்டும் தான் முடியுமே தவிர அவனால் நம்மை மேற்கொள்ள முடியாது, நாம் வாய்ப்பு கொடுக்காத வரை மட்டுமே அவனால் நம்மை அதிகாரம் செய்ய முடியாது.
பிசாசு உள்ளே வர எங்கே வழியை திறந்து கொடுத்துள்ளீர்கள் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
உங்களை இந்த அசுசியானக் பாவக் காரியங்களைப் செய்யத் தூண்டியது எது?
முதலில் சிந்தனையில் இது சிறிய எண்ணமாக தோன்றி, நாம் அதை அறியாமல் இருந்து விட்டதால் அது இச்சையாய் மாறுகிறது. பின்பு அது தீட்டான, பரிசுத்த குலைச்சலானக் அந்த காரியங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
நாம் தேவனுடையப் பிள்ளைகளாய் வாழும்போது கிறிஸ்துவுக்குள் எப்போதுமே நமக்கு வெற்றி உண்டு.
தேவையில்லாத சிந்தனைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே, அடிமைத்தனமாக்குகிற இப்படிப்பட்ட இச்சைகளிலிருந்து விடுவிக்கப்பட முடியும்.
பிசாசின் கட்டளையின்படி இச்சைகளினால் தூண்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டால் நீங்கள் குற்றவாளியாக்கப்படுவீர்கள்.
பிசாசிற்கு எதிர்த்து நின்றால், இச்சைகளைத் தூண்டுகிற எண்ணங்களை சிந்தையிலிருந்து விட்டு விட்டால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.
நண்பர்களே! நீங்கள் சரியான நடவடிக்கை எடுத்தால் இந்தப் பாவத்தை மேற்கொண்டு, ஜெயம் பெற முடியும்.
ஏனென்றல், நமது தேவன் கெர்ச்சிக்கிற யூதாகோத்திரத்து யுத்த சிங்கம். பாவத்தின் மீதும், பிசாசின் மீதும் வெற்றி சிறந்தவர். எனவே நாமும் பிசாசின் எல்லா திட்டங்களிலிருந்தும் வெற்றி பெற முடியும்.
சில நடைமுறை உதவிக் குறிப்புகள்
1, நண்பரே! இதை விட்டு வெளியே வர இரவு நேரத்தில் மொபைல் போன் மற்றும் பிற மின்னணு கெஜெட்டுகளை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாக தீர்மானிக்க வேண்டும்.
2, சமூக வலைத்தளங்களிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலகியே இருங்கள். தேவையற்ற எல்லா App களையும் பயன்படுத்த வேண்டாம். மற்ற எந்த வேறு தளத்தையும் பார்க்க வேண்டாம். கிறிஸ்தவ செய்திகளையோ, பிற வீடியோக்களையோகூட சில வாரங்களுக்குப் இணையதளத்தில் பார்க்க வேண்டாம்.
3, இரவு 9 மணிக்கு மேல் பொழுதுபோக்கிற்காக வீடியோக்களோ, மொபைல் போனோ உபயோகிக்கக் கூடாது என்று முடிவு செய்யுங்கள்.
4, லேப் - டாப் மற்றும் மொபைல் போன்களை வீட்டின் முன் அறையில் அல்லது ஹாலில் வைத்து பயன்படுத்தவும். தனியறையில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.
4, தேவையற்ற பாப்அப்களைத் தவிர்க்க, ஆப்ஃலைனில் உங்கள் படிப்பு மற்றும் வேலை சம்மந்தப்பட்டவைகளை செய்யலாம். ஆன்லைனில் இருந்தால் தேவையில்லாதவற்றை பார்க்கத் தோன்றும்.
5, ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவதால் உங்களுக்கு சோதனை ஏற்படுமாயின், நீங்கள் சாதாரண பட்டன் போனை உபயோகப்படுத்தலாம். இது தகவல் தொடர்புக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
6, உங்கள் கண்களால் பார்க்கும் படங்கள், இச்சைகளை தூண்டுவதாக இருந்தால் அதற்கு இடமளிக்க வேண்டாம். அது கண்ணியாக மாறிவிடும்.
பிசாசின் வலையிலிருந்து தப்பிக்க ஆவிக்குரிய ரீதியாக எடுக்க வேண்டிய மூன்னெச்சரிக்கைகள்!
1, உங்கள் ஜெபம் வல்லமை உள்ளது. ஏனென்றால் இயேசுவின் நாமத்திற்கு மட்டுமே பிசாசு நடுங்குவான்.
2, தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில், தொடர்ந்து ஜெபிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளும்போது பாவத்தை மேற்கொள்ள முடியும்.
3, ஜெப நேரத்தோடு வேத வாசிப்பையும் இணைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் வேதம் என்பது கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமாக இருக்கிறது.
4, எவ்வளவு அதிகமாக நாம் வேதத்தை தியானிக்கிறோமோ அவ்வளவு வெளிப்பாடுகள் பெற்றுக் கொண்டு அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம்.
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால் தானே என்று சங்கீதம் 119:9 ம் வசனம் கூறுகிறது.
வேத வசனத்தை இருதயத்திலும், மனதிலும் வைத்து செயல்படாதவரை பாவத்தை மேற்கொள்ள முடியாது.
கர்த்தர் சகலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
அவரே உங்களுக்கு பாவத்திலிருந்து ஜெயத்தைத் தருவார். நீங்கள் குற்றவாளி அல்ல, கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் வெற்றியாளர் என்பதை மறந்துவிடாதீர்கள். தேவனை மட்டுமே சார்ந்து கொள்ளுங்கள்.
ஆமென்!