இன்றைய  வேதவசனம் 29.9.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய  வேதவசனம் 29.9.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

இயேசுவின் வருகைக்கு முன்பு நடந்து கொண்டிருக்கும் ஒரு அடையாளத்தைக் குறித்துப் பார்க்கலாம்.

ஆபிரகாம் மூலமாக வாக்குத்தத்த தேசத்தைப் பெற்ற இஸ்ரவேல் ஜனங்கள் அந்த தேசத்தை விட்டு சிதறடிக்கப்பட்ட பின்பு மோசே, எஸ்றா, செருபாபேல், நெகேமியா போன்ற தேவ மனிதர்களால் அடிமையாகக் கொண்டு போகப்பட்ட யூதர்கள் மீண்டும் தன் சொந்த தேசத்துக்கு திரும்பினார்கள்.

ஏறக்குறைய 1900 வருடம் யூதர்கள் தங்கள் சொந்த தேசத்தை விட்டு அந்நிய தேசங்களில் வாழ்ந்து வந்தனர். இஸ்ரேல் என்ற தேசமே காணாமல் போனது.

சிதறடிக்கப்பட்டு வாழ்ந்து வந்த யூத மக்கள் கி.பி. 1882 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தேசத்திற்கு திரும்ப தொடங்கினர்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற தேசம் மீண்டும் உருவானது.

தேசத்தின் சுதந்திரத்திற்குப் பின் முதல் மூன்று ஆண்டுகளில் யூதர்களின் ஜனத்தொகை இரட்டிப்பானது.
100 நாடுகளுக்கும் மேலான தேசங்களிலிருந்து வந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்வது பிரமிக்க முடியாத ஒன்றாகும்.

8 லட்சம் பேருடன் மீண்டும் உருவான இந்த தேசம் இன்று ஏறக்குறைய 93 லட்சத்திற்கும் அதிகமான யூத மக்கள் வாழும் தேசமாக இஸ்ரேல் உருவாகியுள்ளது.

“நான் உங்களைப் புறஜாதிகளிடத் திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்" (எசேக்கியேல். 36:24) என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தை நிறைவேறிக் கொண்டு வருகிறது. 

இயேசுவின் முதலாம் வருகைக்குப் பிறகு சிதைக்கப்பட்ட இஸ்ரேல் நாடு, அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னால் மீண்டும் உருவாக வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்தின்படி யூதர்கள் மற்றும் அவர்களின் தேசம் அற்புதமாய்த் தோன்றி இருப்பதை நம் சொந்தக்கண்களால் பார்த்து கொண்டு இருக்கிறோம் .

உலகளவில் 14.7 மில்லியன் யூத மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 47% பேர் இஸ்ரேல் தேசத்திற்கு குடி பெயர்ந்து விட்டனர் என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது.

எது எப்படியோ இஸ்ரேல் தனி நாடாக உருவாக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அவர்களின் குடிபெயர்ப்பு அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 20,000 யூதர்கள் ரஷ்யா, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா தேசத்திலிருந்து இஸ்ரேல் தேசத்திற்கு புலம் பெயர்ந்து உள்ளனர்.

“கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்.” (எசேக்கியேல் 37:21,22) என்ற கர்த்தருடைய வார்த்தையின் படி யூத மக்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தன் சொந்த தேசத்தை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.

எனக்கன்பான நன்பர்களே! யூதர்கள் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்புதல் இயேசுவின் வருகைக்கும் உலகத்தின் முடிவுக்குமான அடையாளங்களில் முக்கியமான ஒன்றாகும். 

நம்முடைய வேதாகமத்தில் சொல்லிருக்கிறபடி இயேசுவின் வருகைக்கு முன்பாக இந்தப் பூமியிலே எவை எல்லாம் சம்பவிக்கும் என்று இயேசு சொன்னாரோ, அந்த அடையாளங்கள் எல்லாம் மிக துல்லியமாக நம் கண்கள் முன்பாக நிறைவேறிக் கொண்டு இருக்கிறது.

“அவர் வருகிறார், அவர் (இயேசு) பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்” (சங்கீதம் 96:13).

நீங்கள் நியாயாதிபதியாகிய இயேசுவை சந்திக்க எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்.

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!