அவசர சிகிச்சை பிரிவுகளில் 83 தொற்றாளர்கள்: ஒட்சிசனின் உதவியுடன் 382 பேர் சிகிச்சை!

#Covid 19 #Corona Virus #Hospital
Prathees
3 years ago
அவசர சிகிச்சை பிரிவுகளில் 83 தொற்றாளர்கள்: ஒட்சிசனின் உதவியுடன் 382 பேர் சிகிச்சை!

இலங்கையில் கொரோனா நோயாளர்களில் தற்போது 83 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கொரோனா தொடர்பான இணைப்புச் செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒட்சிசன் தேவையுடைய நோயாளர்களின் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்திருந்தது.

நாட்டில் 275 கொரோனா சிகிச்சை நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!