இலங்கையில் அரசின் தலையீடின்றி பேக்கரி உற்பத்திப்பொருட்களின் விலையதிகரிப்பு?

#Wheat flour #prices
Yuga
3 years ago
இலங்கையில் அரசின் தலையீடின்றி   பேக்கரி உற்பத்திப்பொருட்களின் விலையதிகரிப்பு?

கோதுமை மா பற்றாக்குறை காரணமாக உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாக குறித்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் தலையீடு இன்றி விலையதிகரிப்புக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் 87 ரூபாவுக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படும் நிலையில், சில இடங்களில் 107 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சில பகுதிகளில் உள்ள பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!