ஜிவி பிரகாஷின் ‘பேச்சுலர்’ படத்தின் முக்கிய அப்டேட்!
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘பேச்சுலர்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் படக்குழுவினர் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் சிங்கிள் பாடல் வரும் முப்பதாம் திகதி ரிலீஸ் ஆக உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
திபு நிபுணன் தாமன்ஸ் இசையில் உருவாகியுள்ள அடியே என்று தொடங்கும் இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜிவி பிரகாஷ்க்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்