இலங்கையில் தினமும் 5000 மெற்றிக் தொன் உணவு வீணாகிறது!!
இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது. அரிசி அரசியலாக்கப்பட்ட வார்த்தையாகிவிட்டது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.
உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசு குறைப்பு குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தையொட்டி சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மனித நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகிறது என்பது தெரியவந்துள்ளது. அந்த தொகை ஒரு வருடத்தில் 1.3 பில்லியன் தொன் ஆகும்.
நம் நாட்டில் பயிர்களால் உற்பத்தி செய்யப்படும் உணவில் 40 சதவிகிதம் வீணாகிறது. மேலும் சுமார் 5000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவுகள் தினமும் குப்பையாக வீசப்படுகின்றன என்று அவர் கூறினார்.
இந்த சூழ்நிலையால் நாடு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளன.
எனவேஇ 2030 ஆம் ஆண்டுக்குள் உணவு கழிவுகளை 50 சதவிகிதம் குறைக்க இலக்கு வைத்துள்ளோம். உலகில் சுமார் 820 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்படுகின்றனர்.
உலக மக்களுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், முறையற்ற விநியோகம் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் உணவை இழந்துள்ளனர்.
இன்று அரிசியைப் பற்றி அதிகம் பேச வேண்டிய பருவம். கிழக்கின் தானியக் களஞ்சியமாக கருதப்பட்ட நமது நாட்டில் இன்று அரிசி அரசியல் மயமாக்கப்பட்ட வார்த்தையாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் தட்டுப்பாடு என்று அவர் மேலும் ;தெரிரிவவித்தார்.