மட்டக்குளிய கொலைச்சம்பவம்: லெப்டினன்ட் கர்னல் கைது 

#Murder #Arrest #Colombo
Prathees
3 years ago
மட்டக்குளிய கொலைச்சம்பவம்: லெப்டினன்ட் கர்னல் கைது 

மட்டக்குளிய பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரின் கணவரை கொலை செய்து களனி ஆற்றில் வீசிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான  லெப்டினன்ட் கர்னல் நேற்று (29) கொழும்பு வடக்கு சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மர்மமான கொலை தொடர்பாக இதுவரை மட்டக்குளிய புலனாய்வு முகாமில் கடைமையாற்றிய 13 இராணுவீரர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் லெப்டினன்ட் கர்னல் முன்பு இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபரான  லெப்டினன்ட் கர்னல் நேற்று (29) மாலை இராணுவ பொலிஸாரால்  பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். அதன்பிறகு  வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட  அகில சம்பத்தின் மனைவியான கிராம உத்தியோகத்தருடன்  இராணுவ அதிகாரி சட்டவிரோதமான உறவு வைத்திருந்ததாக தெரியவந்ததையடுத்து இந்த கொலை நடந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரதாhன சந்தேகநபர், மட்டக்குளிய கெமுனு 6வது பட்டாலியனின் லெப்டினன்ட் கர்னல் கட்டளை அதிகாரி ஆவார்.

அவர் அகில சம்பத்தை தனது கட்டளையின் கீழ் 13 வீரர்களின் உதவியுடன் கடத்தி மாதம்பிட்டிய பகுதியில் கொலை செய்துள்ளார். பின்னர் சடலம் களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட அகில சம்பத்தின் உடல் மோதரா காக்க தீவில் கரையொதுங்கியதையடுத்து  மட்டக்குளிய பொலிஸார் கொலைக்கான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்பின்னர் கொலை தொடர்பான விசாரணை கொழும்பு வடக்கு சிறப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 விசாரணைக்கு பிறகு அகில சம்பத்தை கொலை செய்த சம்பவம் தொடர்பாக   சம்பந்தப்பட்ட 13 வீரர்கள் மற்றும் அவரது மனைவி ஆகியொர் கைது செய்யப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!