பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் இறப்பு திட்டமிட்ட செயலா? கணவன் கதறல்! வெளியான தகவல்

Reha
3 years ago
பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் இறப்பு திட்டமிட்ட செயலா? கணவன் கதறல்! வெளியான தகவல்

உடுவில் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி தமிழினி பிரபாகரன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்திற்கு பிரதேச செயலகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவர் சிறுநீரக நோயாளியாக இருந்தபோதிலும் கொரோனா காலத்திலும் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார் என்றும் இதனாலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எனவும் குடும்பத்தினர் மேலும் தெரவித்தனர்.

‘எனது மனைவியின் மரணத்திற்கு உடுவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இரத்தினேஸ்வரியே காரணம். அத்துடன் டி.சி ஜெயசிஜெயசிறியும் இதற்கு துணைபோனார். இவர்களாலேயே எனது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது’ என மரணமடைந்தவரின் கணவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்ணின் கணவரான பிரபாகரன் ஆசிரியராவார். தனது மனைவி ஒரு நோயாளி என்பதால் அவரைத் தாங்கள் கவனமாக பார்த்து வந்தார்கள் என அவர் கூறுகின்றார். ‘எனது மனைவி சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர். அவர் ஒரு நோயாளி.

இதனால் அவரை அடிக்கடி அலுவலகத்திற்கு அழைக்காதீர்கள், விடுமுறை வழங்குங்கள் என்று திட்டமிடல் பணிப்பாளருக்கு நான் தொலைபேசியில் கூறினேன். அதன்போது நீர் எப்படி இதுபற்றி என்னோடு கதைக்க முடியும்? உமக்கு கதைப்பதற்கு அதிகாரம் இல்லை என்று அவர் எனக்கு பதிலளித்தார்’ என்று கணவன் தெரிவித்தார்.

‘இதன் பின்னர் மனைவி அலுவலகத்திற்கு சென்றபோது அவரை தமது அறைக்கு அழைத்த உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு முன்பாக கண்டபடி ஏசினார். அன்று வீட்டிற்கு வந்த எனது மனைவி கடும் மன உளைச்சலுடன் இருந்தார். இதுபற்றி எனக்கு கூறினார்’ என்றும் கணவரான பிரபாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
எனது மனைவி நோயின் தாக்கத்தால் வீட்டில் நடுக்கத்துடன் இருந்தபோதுகூட செப்டெம்பர் 8 ஆம் திகதியன்று இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க கட்டாயம் அலுவலகம் வரவேண்டும் என்று திட்டமிடல் பணிப்பாளர் அழைத்தார். அதனால் அன்றைய தினமும் எனது மனைவி அங்கு சென்றார் எனக் கணவன் கவலையுடன் தெரிவிக்கிறார்.

திட்டமிடல் பணியாளர்கள் தமது தேவைகள் தொடர்பாக பிரதேச செயலருக்கு தெரிவிக்கக்கூடாது என்று உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தடுத்துவந்தார் என்றும் தமது மனைவி பிரதேச செயலரைச் சந்திப்பதற்கும் இவர் அனுமதிக்கவில்லை என்றும் கணவன் கூறுகின்றார்.

நோயாளர்களை கொரோனா அதிகமாகத் தாக்கும் எனத் தெரிந்திருந்தும் எனது மனைவியை அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு நோய் தொற்றுவதற்கு காரணமாக இருந்து அவரைக் கொலை செய்துள்ளனர் எனவும் கணவன் குமுறுகின்றார்.

எனது 9 வயது மகன் அம்மாவை இழந்து தவிக்கிறான். நான் மனைவியை இழந்து தவிக்கின்றேன். எமது குடும்பம் ஒரு நல்ல மகளை இழந்து தவிக்கின்றது. இதற்கு உடுவில் பிரதேச செயலகம் பதில் கூறியே ஆகவேண்டும் என்றும் கணவன் கவலையுடன் கூறினார்.

இதேவேளை, சிறிலங்காவில் உள்ள ஏனைய பிரதேச செயலகங்கள் வீட்டில் இருந்து பணியாற்றுதல் என்ற அடிப்படையில் கடமைகளை ஒழுங்குபடுத்தி வழங்கியிருக்கின்றன. ஆனால், உடுவில் பிரதேச செயலகம் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்கள் போன்ற உத்தியோகத்தர்களை தமது சொந்த லீவில் நிற்குமாறு பணித்துள்ளது. இதனால் அப்பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரோ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொழிற்சங்கமோ எந்தவித கவனமும் செலுத்தவில்லை என்றும் தெரியவருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!