ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்ட மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள்

#Colombo #Court Order
Prathees
3 years ago
ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்ட மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள்

 தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவை நீக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எபிக் லங்கா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உதவி மென்பொருள் பொறியாளர் திலீப ராமநாயக்கவை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு  நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது மேலதிக விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என தெரிவித்து அவரது  பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரர சபையின் கணினித் தரவைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்த எபிக் லங்கா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சந்தேக நபர்இ நாட்டில் மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை இறக்குமதி செய்வது தொடர்பான 11,000 க்கும் மேற்பட்ட தரவை நீக்கியமை தவறுதலாக நடைபெற்ற ஒன்றல்ல.   அவை  வேண்டுமென்றெ அழிக்கப்பட்டதாக  மூன்று பல்கலைக்கழக பேராசிரியர்களின் உதவியுடன் சிஐடியின் கணினி அறிவியல் பிரிவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபர் அவரது வீட்டில் இருந்து  09.07.2021 அன்று அதிகாலை 3.48 முதல் மறுநாள் காலை 10.25 வரை ஐந்து மணி நேரத்திற்கு மேல் சேமித்து வைக்கப்ட்ட தரவை கடத்தல்காரர்களின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளதாக  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தரவுத்தளத்தை பராமரிக்க தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மாதம் 500,000 ரூபாய்க்கு மேல் எபிக் லங்காவுக்கு பணம் செலுத்தியதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மறுநாள் பிற்பகல் 2 மணியளவில் சந்தேகநபருக்கு தரவுத்தளத்தில் ஏதோ தவறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அதனை  ஆய்வுவு செய்த போது தரவு நீக்கப்பட்டுவிட்டதாக  அவர்  நடகமாடியதாக பிரதி சொலிசிட்டர்  நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீக்கப்பட்ட தரவு நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான நோயாளிகளுக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். 

எபிக் லங்கா நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதற்கு பத்து நாட்களுக்கு முன்பு தனது பதவியை சந்தேக நபர் இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி  தரவுகள் அழிக்கப்பட்டமை தவறுதலாக நடந்த ஒன்றல்ல என  பிரதி சொலிசிட்டர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!