இன்றையவேத வசனம் 01.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.அப்பா கேட்டார், மகளே, நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?
மகள், கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள்,
நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது.
அப்பா சொன்னார் இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு.
மகள் சிரித்தாள்!
அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார் முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது கொஞ்ச நேரத்தில் சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.
ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே! அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய், ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய்!
ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்!!
வேதாகமத்தில் பரி பவுல்
1 கொரிந்தியர் 6:12 ல் எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; என்று கூறி ஒரு ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ்கிறார்.
அதே போன்று தான் நம்முடைய வாழ்க்கையிலும் வெற்றி பெற உயரப் பறக்க வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கையிலும் ஒழுக்க மிகவும் அவசியம்.
இளம்பருவத்தில் கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால் வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரும்.
திரைப்படம், தொலைக்காட்சி, காதல் போன்ற புறக் கவர்ச்சிகளில் அடிமையாகி நம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான ஒழுக்கத்தையும், அறிவூட்டும் கல்வியையும் செம்மையாக்கி கற்று கற்ற நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழ்க்கையில் சிறக்கலாம்.
கொரிந்தியர் 9:25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
சிறந்த நடத்தையை விட இவ்வுலகில் அழகானது வேறொன்றுமில்லை.
ஆமென்