நயன்தாராவின் படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் நடிகர் கவின்
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
நடிகர் கவின் நடித்து வெளியாகியுள்ள லிஃப்ட் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து கவின் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
மேலும், இணையத் தொடர் ஒன்றில் ரெபா மோனிகா ஜானுடன் கவினும் இணைந்து நடித்து வருகிறார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் தி ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் படத்தில் கவின் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.