முதல் முறையாக கதை கேட்காமல் ஓகே சொன்ன தனுஷ்

Prabha Praneetha
3 years ago
முதல் முறையாக கதை கேட்காமல் ஓகே சொன்ன தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க உள்ளார்.

இதில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி வரும் இப்படத்தில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

மேலும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மேலும் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுந்தர் சி தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம், உலகநாயகன் கமல் நடித்த அன்பே சிவம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!