காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா
நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை இழந்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா வசம் சென்றுள்ளது.
இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.