இன்றையவேத வசனம் 8.10.2021
ஒரு அரசாங்க ஊழியருக்கு ஒரு நாள் ஒரு எண்ணம் வந்தது, நான் லஞ்சமாக பணம் வாங்காவிட்டாலும் மனம் உவந்து மற்றவர்கள் தரும் அன்பளிப்பை வாங்கி ஏழைகளுக்கு செலவிடலாமே? அதில் என்ன தவறு இருக்கிறது?
ஒருவேளை நான் ஏழைகளுக்கு உதவி செய்யும்படியாகவே கர்த்தர் எனக்கு இந்த வேலையை தந்திருக்கலாம்? எனவே நான் லஞ்சமாக வாங்காமல் மனமுவந்து அன்பளிப்பாக வரும் தொகையை வாங்கிக் கொள்ளப் போகிறேன்.
அப்படி நினைத்த அதே நாளில் ஒருவர் ஒரு முக்கியமான சர்டிபிகேட்டிற்காக அவரை தேடி வந்தார். இந்த கிறிஸ்தவ அரசாங்க ஊழியர் உடனே அவருக்கு செய்து முடித்தார்.
அன்பளிப்பு ரூ 500/- கிடைத்தது.அன்று மாலை அவர் தன் தாயிடம் அந்தப் பணத்தை கொடுத்து, அம்மா எதாவது ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள் என்று சொன்னார்.
பக்தியுள்ள அந்தத் தாய் மகிழ்ச்சியோடு வாங்கி பெட்டியில் வைத்தார்கள். ஆனால் அன்றிரவு அவர்களால் ஜெபிக்க முடியவில்லை இரவில் கர்த்தருடைய சத்தம் தெளிவாக கேட்டது.
உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு" (மத்தேயு 19:21).
எனவே மறுநாளில் அந்த பணத்தை கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.
நீங்கள் லஞ்சம் என்ற கொடிய பாவத்தை அன்பளிப்பு என்னும் அழகிய போர்வையில் போர்த்திக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுப்பதில் கர்த்தர் ஒரு போதும் விரும்பமாட்டார்.
நீங்கள் மனமுவந்து நீங்கள் சம்பாதித்து தரும் உங்களது இரண்டு காசுகளிலே அவர் பிரியமாக இருப்பார்.
வேதம் சொல்கிறது..
சங்கீதம் 5:4
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.