‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ உருவாகும் - நடிகராக சிவகார்திகேயன் இல்லையாம்?!!
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்தது.
சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார்.
அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம். போட்றா வெடிய” என குறிப்பிட்டுள்ளார்.