இன்றைய வேத வசனம் 09.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
பல ஆண்டுகளுக்கு முன் சீன தேசத்தில் சென்று மிஷனெரிப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஒரு அமெரிக்கர்.
அவருக்கு சீன மொழி தெரிந்ததால் அவரை தங்கள் எண்ணெய்க் கம்பெனியின் பிரதிநிதியாக நியமித்து விடலாம் என்று விரும்பியது, ஒரு பணம் படைத்த நிர்வாகம்.
அந்த மிஷனெரிக்கு பல ஆயிரக் கணக்கான டாலர் ஊதியம் தர வாக்களித்தது அந்த கம்பெனி. ஆனால் அந்த மிஷனெரி மறுத்துவிட்டார்.
இந்த சம்பளம் போதாதா என்று அவரிடம் கேட்டபோது, மிஷனரி சொன்னார், சம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்! நான் நித்திய ஜீவனுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறேன், நரக அக்கினியினின்று மக்களை மீட்டுக் கொண்டு இருக்கிறேன்.
இந்த மேன்மையான பணியை விட்டு விட்டு, எணண்னெய் விற்க்கச் சொல்கிறீர்களே என்றார்.
உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; என்று வேதம் வர்ணிக்கிறது (எபி 11:38).
தேவபிள்ளைகளே, உங்களது தேசத்தின் உத்தரவாதம் உங்களது கைகளில் தான் இருக்கிறது.
எத்தனையோ வெளி தேசத்து மிஷனெரிகள் நம் தேசத்தில் வந்து தங்கள் இரத்தத்தை ஊற்றி இருக்கிறார்கள்.
உத்தம இருதயத்தோடும் தொடருவது இனி உங்கள் பொறுப்பு.. இன்றே, பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
நாளாகமம் 16:9
உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி,.கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது;
ஆமென்.