நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான மனோரமாவின் நினைவு தினம் இன்று

Prabha Praneetha
3 years ago
நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான மனோரமாவின் நினைவு தினம் இன்று

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான மனோரமாவின் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவரது அவரது நினைவை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் போற்றி பாராட்டி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா இவர் 1000 படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புக்கில் இடம் பெற்று இருந்தார் என்பதும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1963ஆம் ஆண்டு ரத்தத் திலகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் சிவாஜிகணேசன் எம்ஜிஆர் உள்பட பல தலைமுறைகளையும் நடிகர்களுடன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு அவருடைய படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் அவர் நாயகியாகவும் நடித்து உள்ளார்

இந்த நிலையில் புன்னகை நடிகை மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி தனது 78வது வயதில் காலமான நிலையில் அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!