விறுவிறுப்பான இறுதிகட்டத்தில் வலிமை..
இரண்டாவது முறையாக அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் சில மாதங்களே இருப்பதால், படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில், யுவன் வலிமை படத்தின் ரீ ரெக்கார்டிங்கை அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளாராம்.
மேலும், இதற்காக சுமார் ஒரு மாதகாலம் கால அவகாசமும் கேட்டுள்ளாராம்.
இதுதவிர வலிமை படத்தின் நகல் நவம்பர் மாதம் தான் கிடைக்குமாம். இதன் பின்னர் அதிகபட்சம் 45 நாட்களுக்குள் படத்தின் மொத்த பணிகளையும் படக்குழுவினர் முடிக்க வேண்டும்.
ஏனென்றால் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
எனவே மிகவும் குறைந்த அவகாசமே படக்குழுவினருக்கு உள்ளது. இதனால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்து கொண்டிருக்கின்றனர். முன்னதாக தீபாவளிக்கே வலிமை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் பொங்கலுக்கு படத்தின் வெளியீடு தள்ளி சென்றது. இப்படி பல முறை ரசிகர்கள் ஏமாந்துள்ளனர்.