டாக்டர் பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
முதல் நாள் ஒரு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொருத்தே அப்படம் திரையரங்குகளில் ஓடும் நாட்கள் நிர்ணயம் செய்யப்படும்.
அந்த வகையில் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் சாதனை படைத்து விட்டது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற சூழலில் தான் டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியானது.
இதனால் இப்படத்தின் வசூல் எப்படி இருக்குமோ என படக்குழுவினர் அச்சத்தில் இருந்தனர். இருப்பினும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் டாக்டர் படம் முதல் நாள் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாம்.
கொரோனா பிரச்சனைக்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாக டாக்டர் படம் பார்க்கப்படுகிறது.