பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா

Prabha Praneetha
3 years ago
பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் மூலம் பிரபல நடன இயக்குனர் டைரக்டராக களமிறங்கியுள்ளார் .

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை பாபி ஆண்டனி இயக்க உள்ளார். நடன இயக்குனரான இவர், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பாபி ஆண்டனி, ஆண்ட்ரியா

இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார். 

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!