இன்றைய வேத வசனம் 12.10.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 12.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளிய வாக்குதத்தங்கள் வேதாகமத்தில் ஏராளம் உண்டு.

வாக்குதத்தங்கள், நாம் சோர்ந்து நிற்கும் நேரங்களில் புதிய நம்பிக்கை தந்து, புதிய வேகத்துடன் நம்மை முன்னோக்கிச் செல்ல உற்சாகப்படுத்துகிறவைகளாயிருக்கிறது. 

அப்படிப்பட்ட உயிரோட்டம் நிறைந்த வாக்குதத்தங்களில் மிக முக்கியமானது நான் உன்னோடு இருப்பேன் என்ற வாக்குதத்தமாகும்.

இந்த வாக்குதத்தம் தேவனை நமக்கு மிகவும் அருகில் இருக்கிறவராக உணரவும், தைரியம் கொண்டு உற்சாகமாக செயல்படவும் நம்மை எவுகின்றது.

நம்பிக்கையற்ற வேளைகளில் நம்மை உற்சாகப்படுத்தவும் நம்பிக்கையூட்டவும் தேவன் நமக்கு கொடுக்கும் ஒப்பற்ற வாக்குதத்தம் தான் நான் உன்னோடு இருப்பேன் என்பதாகும்.

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் பார்வோனிடமிருந்து விடுவிக்கும் வேலையை மோசேயிடம் தேவன் ஒப்படைத்தார்.

ஆனால் மோசே தன் பலவீன நிலையைக் கணக்கிட்டு தன்னால் அது எப்படி சாத்தியமாகும் என்று கலங்கினான்.

பல லட்சம் மக்களை யோர்தானுக்கு அப்பாலுள்ள கானானுக்கு வழிநடத்தும் சுமையை தேவன் யோசுவாவின் மேல் வைத்தபோது யோசுவா திகைத்தான்.

வலிமை வாய்ந்த மீதியானியர்களிடமிருந்து இஸ்ரவேலை இரட்சிக்க கிதியோனை தேவன் தெரிந்து கொண்ட போது அவன் தன் அற்ப நிலையை நினைத்து அங்கலாய்த்தான்.

இதுபோன்ற வேலைகளில் தேவன் அவர்களின் கையில் கொடுத்த வல்லமையான ஆயுதம் தான் நான் உன்னோடு இருப்பேன் என்ற வாக்குத்தத்தம். ( யாத்திராகமம் 3:12, யோசுவா 1:5, நியாயாதிபதிகள் 6:16)
அந்த வல்லமையான ஆயுதத்தைப் பெற்ற ஒவ்வொருவரும் தங்களால் கூடாத காரியங்களை மிக எளிதாகச் செய்து முடித்து வெற்றி பெற்றனர்.

கடக்கக் கூடாத பல சோதனை ஆறுகள் உங்களுக்கு முன்பாக ஓடிக் கொண்டிருக்கலாம், எதிர்க்க இயலாத அளவிற்கு பல பிரச்சனைகள் எதிராக நின்றுகொண்டு பயமுறுத்திக் கொண்டிருக்கலாம், தப்பித்துப் போக முடியாத அளவிற்கு பல இக்கட்டுகள் உங்களை சூழ்ந்து கொண்டிருக்கலாம், ஆனாலும் நம்பிக்கையூட்டும் ஒரு செய்தி இயேசுவிடம் இருந்து உங்களுக்கு வருகின்றது. 

ஆபிரகாம், யோசேப்பு, மோசே, யோசுவா, கிதியோன், தாவீது போன்றோருக்கு தேவன் அளித்த தம்முடைய மாபெரும் வாக்குத்தத்தத்தை இன்று உங்களுக்கும் தர விருப்பமுள்ளவராக இருக்கிறார்.

இன்றும் இயேசு உங்களை பார்த்து சொல்லுகிறார் நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்பதாக.
ஆம் நண்பர்களே, நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர் என்று விசுவாசத்துடன் நீங்கள் அறிக்கையிடும் போது கர்த்தர் நிச்சயமாக உங்களை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் .

நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்;  (ஆதியாகமம் 26:3)
ஆமென்!!
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!