அரசு கையாள தேவையில்லாத துறைகள்தான் தனியாருக்கு..!மோடி
Prabha Praneetha
3 years ago
சமீப காலமாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் நிலையில் நடப்பு ஆண்டு பட்ஜெட் தாக்கலில் அரசு பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்பதாக அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் அரசின் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய விண்வெளி சங்கத்தை திறந்து வைத்தபோது பேசிய பிரதமர் மோடி “இந்திய விண்வெளித்துறை மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய தெளிவான கொள்கையுடன் அரசு முன்னேறி வருகிறது. அரசு கையாள தேவையில்லாத பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே தனியாருக்கு வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.