“ஓ மணப்பெண்ணே” திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!
Prabha Praneetha
3 years ago
கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இதில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ”பெல்லி சூப்பலு” படத்தின் ரீமேக்கான இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டுள்ளார்.