திருகோணமலையில் 4 வயது குழந்தை உட்பட 65 பேர் கைது
#Arrest
#Trincomalee
Prathees
3 years ago

திருகோணமலையில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் 4 வயது குழந்தை உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்வதற்காக திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 63 ஆண்கள், ஒரு பெண் மற்றும் 4 வயது குழந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



