இன்றைய வேத வசனம் 13.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
உன்னதங்களுக்கு பறக்க விரும்பும் கழுகுகளின் இரண்டு செட்டைகளும் பலம் பொருந்தியவைளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது உயரே எழும்பும் முடியும்!
கர்த்தருடன் உன்னதங்களிலே உலாவ விரும்பும், தேவ பிள்ளைகளுக்கு இரண்டு செட்டைகள் அத்தியாவசியம் அவை துதியும் ஸ்தோத்திரமாகும்.
இடைவிடாத துதியும், ஸ்தோத்திரமும் பூமியின் பற்றை உங்களை விட்டு அகற்றி, தெய்வீக சுபாவத்தை உங்களுக்குத் தந்து, தெய்வீக பிரசன்னத்தை உணரச் செய்யும். கழுகுகளை போல செட்டைகளை அடித்து கர்த்தருக்கென்று எலும்புவீர்களாக!!
ஸ்தோத்திரம் என்பது தேவன் செய்த நன்மைகளை எல்லாம் நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவதாகும். துதி என்பது தேவனுடைய வல்லமையையும், கிருபையையும், சிருஷ்டிப்புகளையும் நினைத்து அவரை மகிமைப்படுத்துவதாகும்.
நம் தேவனாகிய கர்த்தர் ஒருவர் மட்டுமே சகல கனத்திற்கும், மகிமைக்கும், துதிக்கும் பாத்திரராயிருக்கிறார்.
துதியும், ஸ்தோத்திரமும் நிறைந்ததுதான் பரலோகம். யோவான் பரலோக காட்சியைப் பார்த்தபோது அங்கே இருந்த சகலரும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். (வெளி 5:13) என்று கூறுகிறார்.
நாம் துதி பலிகளையும், ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தும் போது நாம் பரிசுத்த அலங்காரத்துடன் இருப்பது அவசியம் ஏன் என்றால் வேதம் சொல்கிறது.
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். (சங்கீதம் 96:9)
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; (நீதி 15:8)
இப்படி நாம் பரிசுத்த அலங்காரத்துடனே தேவனுக்கு துதி, ஸ்தோத்திர பலிகளை செலுத்தும்போது நம்மில் தேவகிருபை பெருகும்!
ஆமென்