பிகில், மாஸ்டர் பட விநியோகிஸ்தர் மாரடைப்பால் மரணம்!
Prabha Praneetha
3 years ago
பிரபல தயாரிப்பாளரும், ஜூனியர் என்.டி.ஆரின் பி.ஆர்.ஓ.வுமான மகேஷ் கொனேரு பத்திரிகையாளராக சினிமா துறையில் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் பட விமர்சகராக பிரபலமான அவர் 118 என்கிற படத்தை தயாரித்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் மாஸ்டர் படங்களை டோலிவுட்டில் விநியோகம் செய்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தின் மார்க்கெட்டிங் குழுவில் ஒருவராக இருந்தார்.
இப்படி தொடர்ந்து திரைத்துறையில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு பிரபலமான அவர் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இளம் வயதில் மரணமடைந்துள்ள மகேஷ் கொனேரு குடும்பத்திற்கு ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.