தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்: உயிரிழந்த  உயிரினங்கள் பற்றிய அறிக்கை வெளியானது!

#Court Order #Colombo
Prathees
2 years ago
தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்: உயிரிழந்த  உயிரினங்கள் பற்றிய அறிக்கை வெளியானது!

அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தாக்கத்தால் இறந்த கடல் உயிரினங்கள் குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

அதன்படி, இந்த விபத்து காரணமாக 07  திமிங்கலங்கள்,36 டொல்பின்கள் மற்றும் 369 ஆமைகள் இறந்துவிட்டதாக அவர் கூறினார்.

கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தர்ஷனி லஹந்தபுர இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றுவது இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

தீ விபத்து நடந்து சுமார் 140 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் சில குப்பைகள் கடற்கரையில் கரையொதுங்குகின்றன. நாங்கள் தொடர்ந்து அவற்றை அகற்றுவோம். 

இதற்கிடையில், கப்பலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இது காப்பீட்டு இழப்பீடு பெறும் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது.

இங்கு சட்டமா அதிபர்  நேற்று கைது செய்வதற்கு கப்பல் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை செய்தார்.

இதனையடுத்து, கப்பலை கைது செய்யத் தேவையில்லை என்று கூறி நீதிபதி தீர்ப்பை மாற்றியதாக  அவர் மலும் மேலும் தெரிவித்தார்.

மே 21ம் திகதி, அன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்தது. ஜூன் 2 ஆம் திகதி கப்பல்  கடலில் மூழ்கத் தொடங்கியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!