சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாளை வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
ஆர்யாவின் ‘அரண்மனை 3’, ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படங்கள் நாளை வெளியாகின்றன.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாளை தியேட்டரிலும் ஓடிடியிலும் திரைப்படங்கள் வெளியாகின்றன. 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில், ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம், ’உடன்பிறப்பே’. இதில் சசிகுமாரும் ஜோதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை 14 ஆம் தேதி இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது.
அதேபோலசுந்தர். சி இயக்கத்தில் வெளியான ’அரண்மனை’, ’அரண்மனை 2’ ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தன. நகைச்சுவை வகையில் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் மூன்றாவது பாகத்தை இயக்குனர் சுந்தர். சி தற்போது இயக்கியுள்ளார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படமும் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது.