கொழும்பு மாவட்டத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!

#SriLanka #exam
Yuga
2 years ago
கொழும்பு மாவட்டத்தில்  உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

21 ஆம் திகதி பாடசாலைகள் தொடங்க முன்னர் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின்
முதல் டோஸ் கொடுக்க சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன் முன்னோடித் திட்டமாக 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து மாணவர்களும் தங்கள் அடையாள அட்டைகளுடன் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்எம்டி தர்மசேனா தெரிவித்துள்ளார்.”உங்கள் அடையாள அட்டையை கொண்டு வாருங்கள், நீங்கள் எங்கு சென்று தடுப்பூசியை பெறவேண்டுமென உங்கள் அதிபரிடம் கேட்கலாம்.

ஏனெனில் சில மையங்களில் 3-4 பாடசாலைகளுக்கு ஒரு நிலையத்தை வைத்துள்ளோம். குறிப்பாக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட  பாடசாலை மாணவர்கள் அந்த நிலையத்திற்கு வர வேண்டும்.இந்த அறிவிப்பு சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!