வடமாகாண ஆளுநர் நியமனத்தில் திடீர் மாற்றம் கொண்டுவர காரணம் என்ன? கிளம்பியது சர்ச்சை

Reha
2 years ago
வடமாகாண ஆளுநர் நியமனத்தில் திடீர் மாற்றம் கொண்டுவர காரணம் என்ன? கிளம்பியது சர்ச்சை

வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பின்னணியில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார (Vasantha Bandara) தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சால்ஸ் நிர்மலநாதன் சிறப்பாகவே சேவையாற்றினார். அவரை மாற்றுவதற்கான எந்ந தேவையும் இருக்கவில்லை. ஒரு வருட காலத்தில் அவர் அவருடைய கடமைகளை சரிவர செய்து வந்தார்.

இந்த நிலையில் வட மாகாண ஆளுநா் பதவியில் திடீர் மாற்றம் கொண்டுவர காரணம் என்ன? என வசந்த பண்டார கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த ஜீவன் தியாகராஜாவை வடக்கு ஆளுநராக நியமிப்பதற்கு விசேட காரணங்கள் எதுவும் இருக்க முடியாது.

இவ்வாறான திடீர் தீர்மானங்களால் வடக்கு மட்டுமல்லாது தெற்கிலும் அரசியல் ஸ்திரம் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!