இன்றைய வேத வசனம் 14.10.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 14.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

சிம்சோன் ஒரு வல்லமையான தீர்க்கதரிசி. தேவ ஆவியானவர் அவனை ஆச்சரியமாய் உபயோகித்தார். அவன் வேசியோடு உறவு கொண்டபோது ஆவியானவர் அவனை விட்டு விலகினார். அவன் அதை அறியவில்லை (நியா 16:20).

அவன் முடி முழுவதும் சிரைக்கப்பட்டது. கண்கள் பிடுங்கப்பட்டன. எத்தனை பரிதாபம்! சாத்தான், பாவம் செய்யும் பரிசுத்தவான்களை, எத்தனை கொடூரமாய் சிதைத்துப் போடுகிறான்!

சிம்சோன் சிறையிலே, தன்னை தாழ்த்த ஆரம்பித்தான். கண்ணீரோடு கர்த்தருடைய முகத்தைத் தேடத் தொடங்கினான்! அவன் ஜெபத்தை கேட்ட தேவன், மீண்டும் ஒரு வாய்ப்பை அவனுக்கு கொடுத்தார்.

என் தாயார் அநேக ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை அசைத்த தேவ ஊழியர் தமிழ் டேவிட் என்பவரைப் பற்றி சொல்வதுண்டு.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் அவர் புகழ் எட்டிற்று. அமெரிக்கா சென்ற அவர், அமெரிக்கப் பெண் ஒருத்தியின் வலையில் விழுந்தார். தேவ வல்லமையை இழந்துபோனார்.

தமிழ்நாட்டிற்கு வர வெட்கப்பட்டு, இலங்கை எஸ்டேட் ஒன்றில் போய் ஒளிந்து, கதவை அடைத்துக்கொண்டு, 40 நாட்கள் உபவாசித்து அழுதார்.

முடிவில் கர்த்தர் மனதிரங்கினார். அவரை மீண்டும் உயர்த்தி வல்லமையான ஊழியத்தை தந்தார்.
நாமும்,  தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட்டால், நாமும் இரக்கம் பெறுவோம்!

சிம்சோனுக்கு மீண்டும் பலன் வந்தது போல நம்மிலும் தேவபலன் துளிர்க்கும்!!

அப்போஸ்தலர் 3:20

உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்

ஆமென்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!